பயணிகளை பரிதவிக்கவிட்டு பறந்த விமானம்!

பெங்களூரு (10 ஜன 2023): 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு, இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோப் பர்ஸ்ட் என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் மட்டும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த…

மேலும்...

டிசம்ப 15 முதல் இந்தியாவிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

புதுடெல்லி (26 நவ 2021): எதிர் வரும் டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து,…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – சவூதி அரேபியாவின் அனைத்து விமானங்களும் ரத்து!

ரியாத் (21 டிச 2020): பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து சவூதி அரேபியா அனைத்து சர்வதேச வர்த்தக விமானங்களையும் ஒரு வாரம் நிறுத்தியுள்ளது இந்த தகவலை சவூதி உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சவுதி பத்திரிகை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியில் வசிக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை ரத்து இருக்கும்…

மேலும்...

நடிகை கங்கனா ரணாவத் புகைப்படம் – வீடியோ வெளியானதால் திடீர் உத்தரவு!

புதுடெல்லி (12 செப் 2020): விமானத்திற்குள், புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டால் விமானம் அந்த வழித்தடத்தில் பறக்க இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது. சண்டிகரில் இருந்து மும்பை வந்த தனியார் விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அப்போது, மீடியாவை சேர்ந்தவர்கள், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள்…

மேலும்...

திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...

சீனாவுக்கான சவூதி ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து!

ரியாத் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவுக்கான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனாவுக்கான விமான போக்குரவத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் சவூதி அரேபியாவும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து தொடரும் என்றும்…

மேலும்...