சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ .25 ஆயிரம் அபராதம் – விதிக்கப்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீப காலமாக அதிகரிக்கும் விபத்துக்களுக்கு சிறார்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

டெல்லி கலவரம் – தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

புதுடெல்லி (20 ஜன 2022): வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதல் தண்டனை அறிவிக்கப்பட்டது. தினேஷ் யாதவ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 73 வயது மூதாட்டியின் வீட்டைக் கொள்ளையடித்து பின்பு அந்த வீட்டை எரித்ததற்காகவும், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதற்காகவும் தினேஷ் யாதவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. கோகுல்புரியில் உள்ள பகீரதி விஹாரில் வசிக்கும் 73 வயதான மனோரி என்பவரின் வீடு தினேஷ் யாதவால் தீக்கிரையாக்கப்பட்டது….

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை!

ஐதராபாத் (20 ஜன 2020): 13 வயது வளார்ப்பு மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 48 வயது ரமேஷ் என்பவர் அவர் தத்தெடுத்த 13 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து தாய் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த…

மேலும்...