சீட்டுகளை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த சரத்குமார் – அதிர்ச்சியில் கமல்!

சென்னை (16 மார்ச் 2021): வரும் சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சரத்குமார் கட்சியுடன் இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இதுகுறித்து சரத்குமார் தெரிவிக்கையில், கமல் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் சரத்குமார் கோரிக்கை வைத்தபடி சீட்டுகளை வழங்கிய…

மேலும்...

அந்த ஜாதியால்தான் அங்கு போட்டியிடவில்லை – கமல் பகீர் தகவல்!

சென்னை (14 மார்ச் 2021): மயிலாப்பூரில் போட்டியிடாததற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம்…

மேலும்...

ஓய்வெடுக்கப் போகிறேன் – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு!

சென்னை (18 ஜன 2021): பிக் பாஸ் 4 நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் சில காலம் ஒய்வு மேற்கொள்ளப்போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மநீம சார்பில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய…

மேலும்...

ரஜினி, உவைஸியுடன் கூட்டணி – கமல் ஹாசன் பதில்!

நெல்லை (16 டிச 2020): உவைஸி, ரஜினியிடன் கூட்டணி வைப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். நெல்லையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் , யாருடனும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஓவைசியோடு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை, ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம். ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான்…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

நடிகர் கமல் மகள் ஸ்ருதியின் வைரல் புகைப்படம்!

சென்னை (13 அக் 2020): நடிகர் கமலின் மகளான ஸ்ருதியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்,கிறார். இவர், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது…

மேலும்...

கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மீண்டும் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. ஆனால் மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு…

மேலும்...

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் சாரியான ஆதாரங்களை காட்டவில்லை என்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை…

மேலும்...

உண்மை வெளியே வரும் வரை கேள்வி கேட்போம் – கமல்ஹாசன் அதிரடி!

சென்னை (21 ஜூன் 2020): மத்திய அரசிடமிருந்து உண்மை வெளியே வரும்வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்லை விவகாரம் குறித்து கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ” எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை…

மேலும்...

இது சாதாரண வெற்றியல்ல – கமல்ஹாசன் பெருமிதம்!

சென்னை (09 மே 2020): டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சாதாரண வெற்றியல்ல . தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின்…

மேலும்...