சென்னை (14 மார்ச் 2021): மயிலாப்பூரில் போட்டியிடாததற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம் இதனால் நான் கோவையில் போட்டியிடுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.