தஞ்சையில் குவியும் பக்தர்கள் – பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர் (04 பிப் 2020): தஞ்சை பெரிய கோவிலில் நாளை 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்கு பின், நாளை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையை காண, 1ம் தேதி முதல், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேக விழாவை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வர துவங்கிஉள்ளதால், தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுஉள்ளது. நாளை அதிகாலை,…

மேலும்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூர் (31 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தமிழ் ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூறியபடி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. குடமுழுக்கு…

மேலும்...

தமிழுக்காக போராடுபவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் – எச்.ராஜா ட்விட்!

தஞ்சை (30 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

மேலும்...

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம்!

மதுரை (29 ஜன 2020): தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழா, பூர்வாங்க பூஜையுடன் நேற்று (ஜன.,27) துவங்கியது. இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் நடத்தகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

மேலும்...