தமிழுக்காக போராடுபவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் – எச்.ராஜா ட்விட்!

Share this News:

தஞ்சை (30 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், தஞ்சை பெரியகோவில் உரிமை உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் ‘தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தவேண்டும்’ என்று எழுதியிருக்கும் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, போராட்டத்தில் பங்கேற்பதாக உள்ள இஸ்லாமியர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள். இது தமிழ்மொழி மீதான பற்றுதலால் இல்லை. இந்து மதத்தில் பிளவும் குழப்பமும் ஏற்படுத்தும் சதிச்செயலே. மசூதிகளில் அரபு மொழியில் வழிபாடு நடத்தும் சக்திகளின் கைக்கூலிகள் இவர்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply