இந்திய ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீதுமஹுவா மொய்த்ரா நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (09 பிப் 2021): திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் தனது வாதங்களை எழுப்பியுள்ளார் மஹுவா, . மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்து நேரடியாகவே விமர்சித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு காரணம் ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது ஊடகங்களின் அவதூறு செய்தி – ஆனால் அரசு சொல்லும் தகவல் வேறு.

புதுடெல்லி (10 ஏப் 2020): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜீ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அச்செய்தி உண்மையில்லை என்பதை அரசு சொல்லும் தகவல் உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா தொற்று உலகமெங்கும் அதிவேகமாக பரவி பல உயிர்களை பலிகொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விவகாரத்தை வைத்து மத அரசியல் கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக இந்துத்வா ஆதரவு ஊடகங்கள் பல போலி…

மேலும்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் கைது – அமைதி காக்கும் ஊடகங்கள்!

மும்பை (21 பிப் 2020): பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக உளவு பார்த்த இதிய கடற்படை வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை, கார்வா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ இவர்களை கைது செய்துள்ளது. கைதானவர்கள், சதீஸ் மிஸ்ரா, தீபக் திரிவேதி, ரிங்கோ தியாகி, தேவ் குப்தா, சஞ்சீவ் குமார், பப்லு சிங், ராகுல் சிங், சஞ்சய் ராவத், ரிஸி மிஸ்ரா மற்றும் வேத்ராம் ஆகியோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில்…

மேலும்...

உண்மை ஒருநாள் வெளியே வரும் – ஊடகங்கள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (07 பிப் 2020): ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின் ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம்…

மேலும்...

பத்திரிகைத்துறை மீது ஜனாதிபதி காட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): நாட்டில் பத்திரிகைத் துறை பொய் செய்திகளின் கூடாரமாக உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். அவர் பேசுகையில், “பிரேக்கிங் நியூஸ் எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுப்பாடு, பொறுப்பு போன்ற பத்திரிகை தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப் பட்டுள்ளன. தரமான ஒரு செய்தியை…

மேலும்...

ஊடகங்கள் குறித்து நடிகர் ரஜினி விமர்சனம்!

சென்னை (14 ஜன 2020): ஊடகங்கள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும்…

மேலும்...