புதுடெல்லி (10 ஏப் 2020): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜீ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அச்செய்தி உண்மையில்லை என்பதை அரசு சொல்லும் தகவல் உறுதிபடுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உலகமெங்கும் அதிவேகமாக பரவி பல உயிர்களை பலிகொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விவகாரத்தை வைத்து மத அரசியல் கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக இந்துத்வா ஆதரவு ஊடகங்கள் பல போலி செய்திகளை பரப்பி முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.
இச்சூழலில் ஜீ தொலைக்காட்சி அருணாச்சல பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாத்தினர் என்பதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அருணாச்சல அரசு ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு அருணாச்சல மாநிலத்தில் உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் போலி செய்திகளை எந்த அளவில் இந்திய ஊடகங்கள் பரப்பி வருகின்றன என்பது உறுதியாகின்றது.