சவூதி அரேபியா மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத…

மேலும்...

கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்…

மேலும்...

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்தாயிரம் மசூதிகளில் பறந்த தேசிய கொடி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் பட்டது. காலை டெல்லி ராஜபாதையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில்…

மேலும்...