குடியரசு தினத்தை முன்னிட்டு பத்தாயிரம் மசூதிகளில் பறந்த தேசிய கொடி!

Share this News:

திருவனந்தபுரம் (26 ஜன 2020): இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் பட்டது. காலை டெல்லி ராஜபாதையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றினர்.

இந்நிலையில் கேரளாவில் குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

குடியுரிமை சட்டம் இயற்றப் பட்ட நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply