ராகுல் காந்தி மீது பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!
நாகர்கோவில் (20 மே 2020): ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்படுகிறார் என்று முன்னாள் மத்திய இணை அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “வெள்ளாடிச்சிவிளை பகுதி தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். பள்ளிகள்…