துபாயிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம்!
மும்பை (25 டிச 2021): ஒமிக்ரான் பரவிவரும் சூழலில் துபாயில் இருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. துபாயில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பயணிக்கும் பயணிகள் ஏழு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, தனிநபர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சோதனை முடிவு எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். நேர்மறை (பாசிட்டிவ்) சோதனை முடிவு எனில், அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு…