விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

Share this News:

சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சிலருக்கு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது.

இந்நிலையில், ‘வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்’ என்று தமிழக அரசு, சிலருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி அவர்கள், வெளியில் சுற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்துடுள்ளது.


Share this News:

Leave a Reply