திண்டுக்கல்லில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி!
திண்டுக்கல் (03 ஜன 2022): திண்டுக்கல்லில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.…