பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் அடித்துக் கொலை – பரபரப்பான சாலையில் அரங்கேறிய கொடூரம்!

Share this News:

காஜியாபாத் (29 டிச 2020): உத்திர பிரதேசம் காஜியாபாத்தின் பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் இரண்டு நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இருவர் அடிப்பதை பொதுமக்கள் வீடியோவால் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளனர். ஆனால் யாரும் தாக்குபவர்களைத் தடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை.

படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் முன்வரவில்லை .

அஜய்யை மலர் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவிந்த் அவரது நண்பர் அமித்துடன் இணைந்து தாக்கியதாக அஜய்யின் சகோதரர் சஞ்சய், போலீசில் புகார் அளித்துள்ளார்.,

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply