டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால்…

மேலும்...

கத்தாருக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 2 முதல் புதிய வழிமுறைகள் அமல்!

தோஹா (30 ஜுலை 2021): கத்தாருக்கு இந்தியா உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வரும் ஆகஸ்ட் 2 முதல் அமலுக்கு வருகின்றன. இதுகுறித்து இந்திய தூதரகம் இந்திய பயணிகளுக்கு விடுத்துள்ள உத்தரவின்படி, கத்தாரில் தடுப்பூசி போடப்பட்டது குறித்து ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். இரண்டாவது நாளில், RTPCR சோதனை எடுத்து கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்துவிடலாம்.. அதேவேளை கத்தாருக்கு வெளியில் இருந்து…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தடை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

துபாய் (28 ஜுலை 2021): இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 7 வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எமிரேட்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…

மேலும்...

22 மாவட்டங்களில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு!

புதுடெல்லி (28 ஜூலை 2021): இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது… அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்?

டோக்கியோ (26 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை நிகழ்த்தினார். சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்….

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (18 ஜூலை 2021): இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்று 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கொரோனா-வுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பைவிட, இன்று 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மேலும்...

துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது….

மேலும்...

சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவு!

தம்மாம் (15 ஜூலை 2021): சவூதி சிறையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மம், கதிஃப் மற்றும் அல் கோபர் சிறைகளில் பல குற்ற வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அடைப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை, எனவே சிறையில் உள்ளவர்களின் தங்கள் தகவல்களை சேகரித்து தூதரகத்தில் சமர்ப்பித்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையே விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்?

துபாய் (13 ஜூலை 2021): இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பயணிகள் விமானத் தடை, எதிர்வரும் ஜூலை 21 வரை தொடரும் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது. ஜூலை 21 க்குப் பிறகு ஜூலை 22 முதல் நிபந்தனைகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை கிடைக்க வில்லை இந்தியாவுடன் சேர்த்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும்…

மேலும்...