டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்?

Share this News:

டோக்கியோ (26 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை நிகழ்த்தினார்.

சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார். இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து ஜிஹுய் ஹூவிற்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அமைப்பு.

ஒருவேளை ஜிஹுய் ஹூ ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானால், அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, இரண்டாம் இடம் பெற்ற மீராபாய் சானுவிற்கு அப்பதக்கம் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply