
‘மௌனத்தின் பாடல்’ – கவிதை நூல் விமர்சனம்!
இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்தூனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’ பற்றிய விமர்சனம். இரத்தினச் சுருக்கமான இலக்கிய வடிவம் கவிதை. சங்ககாலம் முதல் சமகாலம் வரை உள்ள கவிதைகளில் இன்றைய கவிதைகள் உணர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் புதியதொரு உருமாற்றம் பெற்றுள்ளன. கவித்திறனும் கருத்தாழமும் மிக்க கவிதைகள் மனித நேயம் – மானுட மகிழ்ச்சி – மக்கள் சுதந்திரம் – மனித எழுச்சி என்கிற மனிதமேம்பாட்டால் தமிழுக்கும் வாழ்வுக்கும் புது முகம் தந்துள்ளன. சமகால அழுக்கை – சமூக…