பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்!

இஸ்லாமாபாத் (13 ஜூன் 2020): பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஃப்ரிடி அவரது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை தேவை“ என்று பதிவிட்டுள்ளார். I’ve been feeling unwell since…

மேலும்...

மகாராஷ்டிராவைவிட தமிழகம்தான் சூப்பர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை (13 ஜூன் 2020): கொரோனா பரிசோதனை மகாராஷ்டிராவை விட தமிழகத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 2,000 செவிலியர்கள் இன்று பணி நியமனம் செய்யபட்டனர். புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது….

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (13 ஜூன் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

முரண்டு பிடித்த போலீஸ் – போராடி வென்ற ஆத்தியா ஃபிர்தவ்ஸ் !

லக்னோ (12 ஜூன் 2020): மத வெறுப்பூட்டும் வகையில் பேசிய மருத்துவர் அரத்தி தேவ் லால்சந்தானி (Arati Dave Lalchandani) மீது வழக்கு தொடுக்க போலீஸ் மறுத்தபோதும் சட்ட நுணுக்கங்களை கூறி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார் கேம்பஸ் ஃப்ரண்ட்டைச் சேர்ந்த ஆத்தியா ஃபிர்தவ்ஸ். கடந்த ஜுன் 2 அன்று உ.பி. கான்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவத்துறை முதல்வர் மருத்துவர் அரத்தி லால் சந்தானி அதே கல்லூரியின் மருத்துவமனையில் கொரோனா-வுக்காக சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம்களை “தீவிரவாதிகள்”…

மேலும்...

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் திடீர் நீக்கம்!

சென்னை (12 ஜூன் 2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த பீலா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மறுபடியும், ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாகத்தில் கமிஷனராக உள்ள ராதாகிருஷ்ணன்…

மேலும்...

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞ்சய் சர்மா பலி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞய் சர்மா உயிரிழந்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி பாஜகவின் சேர்மன் கமிட்டி தலைவராக இருந்த சர்மா, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். சஞ்சய் சர்மா மறைவுக்கு டெல்லி பாஜக பொதுச் செயலாளர் ராஜேஷ் பாட்டியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஊரடங்கு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த…

மேலும்...

எதையும் மறைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சேலம் (11 ஜூன் 2020): கொரோனா மரணம் குறித்த தகவல்கள் எதையும் அரசு மறைக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது….

மேலும்...

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை!

புதுடெல்லி (11 ஜூன் 2020): மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஜி.எச்.எஸ். என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் கவர்னர்கள் மற்றும் துணை கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் இந்நாள்…

மேலும்...