கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்…

மேலும்...

பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்…

மேலும்...

சவூதி அரேபியாவில் கொரோனா காரணமாக இந்தியாவின் 6 மாத கர்ப்பிணிப் பெண் மரணம்!

கத்தீப் (31 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவை சேர்ந்த 6 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை…

மேலும்...

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளால் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் கவலை!

ரியாத் (31 ஜூலை 2021): சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் தேர்வுகள் நடக்கவில்லை. எனினும் தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், பலர் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள், உயர்கல்வி வாய்ப்பை சிதைப்பதாக மாணவர்களும்…

மேலும்...

ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகள் சவூதி வர அனுமதி!

ரியாத் (30 ஜுலை ): 17 மாதங்களக்குப் பின்னர் இரண்டு அளவு கோவிட் தடுப்பூசி எடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதிக்கான, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக நுழைவுத் தடையை ஆகஸ்ட் 1 முதல் நீக்குவதாக சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது சவுதி அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மொடெனா, ஜான்சன்…

மேலும்...

மக்காவில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (26 ஜூலை 2021): அடுத்த மாதம் (முஹர்ரம்) முதல் வெளி நாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதிளிக்கப்படுகிறார்கள். கோவிட் பரவல் காரணமாகவும், விமான தடை காரணமாகவும் வெளிநாட்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரிகர்களுக்கு மக்கா மற்றும் மதினாவில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கும் உம்ரா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டில் (சவுதியில் ) வசிப்பவர்களுக்கு மட்டுமே ஹஜ் மற்றும் உம்ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவ்வருடம் 60ஆயிரம்…

மேலும்...

மூன்றவது டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியமா? – சுகாதாரத்துறை விளக்கம்!

ரியாத் (25 ஜூலை 2021): தற்போதைய சூழ்நிலையில், கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகள் போதுமானதாக இருக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வின்படி, மூன்றாவது டோஸ் இப்போது தேவையில்லை, பின்னர் எதிர்காலத்தில் இதுகுறித்த அவசியம் குறித்து அறிவிக்கப்படும். இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு டோஸ் போதாது. தற்போது, ​​10,829 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1530 பேர் ரியாத்தில் சிகிச்சை பெறுகின்றனர். ஜிதாவில் 653 பேர் , மக்காவில், 540 பேர் தம்மாமில் 519…

மேலும்...

சவூதி நாட்டினருக்கு நிகரான மருத்துவ சிகிச்சைக்கு தகுதியான வெளிநாட்டினர்!

ரியாத் (25 ஜூலை 2021): பதினொரு வகை வெளிநாட்டினர், சவுதி நாட்டினரைப் போலவே மருத்துவ சிகிச்சையும், சுகாதார சேவையும் பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சவூதி நாட்டின் தேசிய குடிமக்களுக்கு நிகரான முழு சுகாதார மற்றும் சிகிச்சையைப் பெறும் வெளிநாட்டினரின் பட்டியலை ஒருங்கிணைந்த தேசிய தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி சவுதி நாட்டினரின் வெளிநாட்டு மனைவிகள், சவுதி பெண்களின் வெளிநாட்டு கணவர்கள், அவர்களின் குழந்தைகள், வீட்டுப் பணியாளர்கள், கைதிகள், சமூக முகாம்களில் உள்ள மூத்தவர்கள், என அரசாங்கத்தின் செலவில்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய சிக்கல் – ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை!

ரியாத் (22 ஜூலை 2021): சவுதியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து நிறுவனங்கள், கடைகள், மால்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சவூதியின் தவக்கல்னா அப்ளிகேஷனில் தடுப்பூசி பெற்ற அல்லது நோயெதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். அதேபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளில்…

மேலும்...

சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர் சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது…

மேலும்...