ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை…

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...

துபாயில் இடியுடன் கூடிய பலத்த மழை – வீடியோ!

துபாய் (11 ஜன 2020): துபாய் அல் அய்ன் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இரவு இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது. சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...
போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - பரிதவிக்கும் துபாய் கணவன்!

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக…

மேலும்...