துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இவர்கள் தற்போது 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் அனைத்து சுகாதாரத்துறை மையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.