
எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…