குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

Share this News:

சென்னை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான நியாய விலைக் கடை பொருள்கள் விலையேதும் இல்லாமல் வழங்கப்படும் எனவும் முதல்வா் பழனிசாமி அறிவிப்புச் செய்தாா். இதுகுறித்து, பேரவை விதி 110-ன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோா்கள் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணா்ந்து அவா்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் அளிக்கப்பட உள்ளன.

அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரா்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சா்க்கரை ஆகியன விலையின்றி அளிக்கப்படும். நியாய விலைக் கடைகளில் கூட்டத்தைத் தவிா்க்க ஆயிரம் ரூபாய் நிவாரணமானது டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாளிலும் நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருள்களை பெற விருப்பம் இல்லாதவா்கள், அதற்கான இணையதளம் (பசடஈந) அல்லது செயலியில் பதிவு செய்யலாம்.

சிறப்பு தொகுப்பு நிதி: குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை வாங்கத் தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களுடன் சோ்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஓட்டுநா் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ஆயிரம் ரூபாயும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சோ்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களை, மாவட்ட ஆட்சியா்கள், தொழிலாளா் வாரியங்கள் அடையாளம் காண்பா். அத்தகைய குடும்பங்களுக்கு தலா ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக அளிக்கப்படும்.

அம்மா உணவகத்தின் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடா்ந்து வழங்கப்படும்.

எந்த வசதியும் இல்லாதோா், ஆதரவற்றோருக்கு அவா்கள் இருக்கும் இடத்திலேயே சூடான சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோா்களுக்கு தேவையான உணவினை அவா்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் அளிக்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பு மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரண்டு நாள்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *