சி.ஏ. படிக்க பத்தாவது பாஸானாலே போதுமாம்!

TN-Students
Share this News:

சென்னை (21 அக் 2020): பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.

சி.ஏ. சேர்வதற்கு Institute of Chartered Accountants of India எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது, பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம் என இருந்த நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டு உள்ளது.

புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒருவர் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா பாடநெறியில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தற்காலிகமாக பதிவு செய்ய உதவுகிறது. CA எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply