ரூ 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் லாரியோடு கடத்தல்!

Share this News:

ஓசூர் (21 அக் 2020): சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் மர்மநபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply