சிவகங்கை (02 அக் 2020): சிறுவயது காதல் பிரச்சனை தற்கொலையில் முடிந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்த வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. உயிரிழந்த சிறுமி அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலிக்கும் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே, சிறுவனிடம் இனி பழக்கூடாதென அவர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து சிறுவனுடன் பழகுவதை நிறுத்த முயன்றபோது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அச்சிறுவன் சிறுமியை அடித்துளான். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டருகே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். குழந்தை பருவம் ஒட்டிக்கொண்டு இருக்கும் 11 வயதில் 16 வயது சிறுவனை காதலித்தது மட்டுமில்லாமல், காதல் முறிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் செயல் அப்பகுதியில் மட்டுமில்லாமல் சம்பவம் அறிந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.