உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இறுதிச் சடங்கு முடிந்து உறவினர்கள் ஊர் திரும்பத் தொடங்கிய போது அவர் நண்பனின் தீயில்குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனந்த் (40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது நெருங்கிய நண்பர் உத்திர பிரதேசம் நாக்லா கங்கரை சேர்ந்த அசோக் (42). புற்றுநோயால்…

மேலும்...

மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான…

மேலும்...

பிரபல தொழிலதிபர் தற்கொலை – தற்கொலைக் கடிதத்தில் பாஜக எம்எல்ஏ பெயர்!

பெங்களூரு (02 ஜன 2023): பெங்களூருவில் தொழிலதிபர் பிரதீப் எஸ் (47) சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.) தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவர்களே தூண்டியதாகவும், தற்கொலைக் கடிதத்தில் கூறியிருபதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் பிரதீப் தனது காரில் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். எட்டு பக்க தற்கொலைக் கடிதத்தில் சிலரது பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். அதில் பாஜக…

மேலும்...

துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10…

மேலும்...

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்!

கோவை (15 டிச 2022): கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை மொத்தமாக இழந்த இளம் பொறியாளர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் பெயர் சங்கர். 29 வயது வாலிபர். சடலத்தின் அருகே தற்கொலைக் கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது சேமிப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகையை இழந்ததால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்…

மேலும்...

பிரபல நடிகை தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது!

இந்தூர் (20 அக் 2022): இந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கரின் மரணத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரும், முன்னாள் காதலருமான ராகுல் நவ்லானி கைது செய்யப்பட்டார். தற்போது அவரது மனைவி திஷா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தூரில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…

மேலும்...

கல்லூரி மாணவி தற்கொலை – பேராசிரியர்கள் கைது!

தென்காசி (13 மார்ச் 2022): தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து பிரியா என்ற மாணவி, அங்குள்ள மனோ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். செய்யாத தவறுக்காக மன்னிப்புக் கடிதம் தர வேண்டுமென பேராசிரியர்கள் அவரை நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இந்து பிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, மாணவர்கள், உறவினர்கள்…

மேலும்...

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!

பெங்களூரு (28 ஜன 2022): கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவதியின் மகள் சவுந்தர்யா (வயது 30) இவர் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணிப்பெண்…

மேலும்...

அரியலூர் மாணவி தற்கொலை – பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம்!

தஞ்சாவூர் (24 ஜன 2022): அரியலூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சையில் தனியார் பள்ளி விடுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மாணவியின் தற்கொலைக்கு மதம் மாற கட்டாயப்படுத்தியதே காரணம் என எழுந்த குற்றச்சாட்டை காவல்துறையினர் ஏற்கனவே மறுத்திருந்தனர். இந்நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் உடலை…

மேலும்...

தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (22 ஜன 2022): தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி அருகே உள்ள…

மேலும்...