சென்னை (10 மே 2020): சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3839 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேர், கிருஷ்ணகிரியில் 10 பேர், திருநெல்வேலி 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.