புதுடெல்லி (10 மே 2020): நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது.
ஏற்கனவே 3-வது ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது, அதற்காக எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என பல்வேறு தகவல்கள் குறித்து நாளைய ஆலோசனையானது நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினத்தை பொறுத்தவரையில் மத்திய அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநில தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக மே மாத இறுதி வரையில் ஊரடங்கை நீட்டித்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாம் என்று ஒடிசா மாநில அரசு சார்பில் முக்கிய கருத்துக்கள் வழங்கப்பட்டத்தை பல்வேறு மாநிலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
எனவே நாளைய ஆலோசனைக்குப் பிறகு பிரதமரின் முடிவுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.