சென்னை (30 ஜன 2020): ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் தேர்வு எழுத முடியுமாம்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்டதிலிருந்தே மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, பெற்றோரின் ஆதார் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டுமாம். இதையும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.