பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து மீண்டும் போராட்டத்தால் திணறும் டெல்லி!

Share this News:

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோபால் என்ற பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஷஹீன் பாக்கிலும் பெண்கள் அதிக அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி மேலும் பரபரப்பு அடைந்தது. துப்பாக்கிதாரி ராம் பகத் கோபாலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதியை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரம் போக போக மாணவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் மாணவர்களுடைய ஆவேசமும் அதிகரித்து வருவதன் காரணமாக காவல்துறையினர் திணறுகின்றனர்.

போராட்டடத்தை கைவிடுமாறு போலீசார் மாணவர்களிடம் பேசி வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகமே! காரணம் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தபடி இருப்பதால் டெல்லி போலீசார் செய்வதறியாது திகைக்கின்றனர்.

முன்னதாக பயங்கரவாதி துப்பாக்கியால் சுடும்போது போலீசார் வேடிக்கை பார்ப்பது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply