சென்னை (08 டிச 2020): உத்திர பிரதேச அரசின் மத மாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை இந்துத்வாவினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடைசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.
கட்டாய மத மாற்றத்திற்கே இந்த சட்டம் என்கிறபோதிலும், தன்னார்வமாக மதம் மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் 60 நாட்களுக்கு முன்பே அனுமதி பெறவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சட்டவிரோதமாக மாற்றுவது என்பது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும், இது போலீஸ் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம் என்றும் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.” இதுகுறித்து அவரது டிவிட்டரில் “லவ் ஜிஹாத்” என்ற வார்த்தை (இரத்த உறவினர்களுக்கிடையேயான உறவின் மூலம் பிறந்தவர்கள்)” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் “வயது வந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க அவர்கள் யார்? அவர்களின் சட்டத்தின்படி, யாரும் எதையும் செய்ய சுதந்திரமில்லை என்பதை காட்டுகிறது. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பாட வேண்டும், என்ன எழுத வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கட்டுப்படுத்த இவர்கள் யார்? என்பதாக சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1335619443553042432