புதுடெல்லி (08 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இன்று பாரத் பந்த்தும் நடந்து வருகிறது.
இருபத்தைந்து அரசியல் கட்சிகள், பத்து தொழிற்சங்கங்கள் மற்றும் 51 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பந்த்க்கு ஆதரவை தெரிவித்துள்ளன. இதற்கிடையே பிரச்னையை தீர்க்க மத்திய அரசு புதன்கிழமை அழைத்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விவசாயிகள் அமைப்புகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமைப்புகள் உறுதியாக உள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பந்திற்கு பெரும்பாலான எதிர் காட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன.
வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அடைப்புக்கு அதிக அளவில் ஆதரவு!