அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்!

Share this News:

சென்னை (30 மார்ச் 2021): கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக, அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், நடைபெற உள்ள சட்டமன்றப் பொது தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தாலும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஏழுமலை, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரசாமி, நாகராஜ், ரங்கசாமி, கமலஹாசன், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply