சென்னை (22 பிப் 2022): சென்னையில் 59 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 259 இடங்களில் திமுகவும், 32 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
சென்னையை பொறுத்த வரையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி இதுவரை 15 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 180க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. .
குறிப்பாக 59 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.