முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா!

அதிராம்பட்டினம் (03 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திமுக பொருளாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதற்கான அலுவலகம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று (03 மார்ச் 2023) வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் திமுக கொடியினையும் ஏற்றி வைத்தார். இதில் அதிராம்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார திமுக பிரமுகர்கள்,…

மேலும்...

தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

சென்னை (01 மார்ச் 2023): தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும்…

மேலும்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம்…

மேலும்...

குஜராத் மாடலை தமிழ்நாட்டில் பின்பற்ற திமுக எம்.எல்.ஏ பரிந்துரை!

சென்னை (16 ஜன 2023): “குஜராத் சட்டசபை போல தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம்!” என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே? குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன?” என பதிவிட்டுள்ளார். “குஜராத் மாடல்” என்ற சொல்லை வைத்தே பிரதமர்…

மேலும்...

வெட்கக்கேடானது – குஷ்பு அதிரடி கருத்து!

கோவை (08ன் ஜன 2023): தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து…

மேலும்...

முன்னாள் திமுக எம்.பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம் – 5 பேர் கைது!

சென்னை (30 டிச 2022): தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தம்பி மருமகன் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய…

மேலும்...

திமுக எம்.பி ஆ. ராசாவின் சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!

சென்னை (22 டிச 2022): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…

மேலும்...

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் திடீர் மரணம்!

சென்னை (22 டிச 2022): தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் இன்று (டிசம்பர் 22) காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்தநிலையில், இன்று காலை சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில்…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின்…

மேலும்...