விருதுநகர் (06 மார்ச் 2020): புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை அதிமுக பிரமுகர்கள் அவமானப் படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு தமிழக அமைச்சர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனும் கலந்து கொண்டார்.
விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது அவரது உரையை மொழிபெயர்க்க, மேடையில் இருந்த தம்பிதுரை, தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் என யாரும் முன்வராததால் 2 நிமிடங்களுக்கு மேல் அவரது பேச்சை யாரும் கண்டு கொள்ளவில்லை.
முதல்வர், அமைச்சர் உள்ளிட்டவர்களும் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். மத்திய அமைச்சரை கண்டுகொள்ளவேயில்லை. பாஜக சாதனைகளை பேச திட்டத்துடன் வந்த ஹர்ஷவர்தன் 13 நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டார்.