இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை!

Share this News:

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 30 என்ற கணக்கில் இருந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தற்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 28 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் புதன்கிழமை அறிவித்திருந்தது. இதில் 16 பேர் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர். இதன்பிறகு, பேடிஎம் நிறுவன ஊழியர் ஒருவரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் புதன்கிழமை இரவு அறிவித்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.

இந்நிலையில், தில்லிக்கு அருகாமையில் இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள ஒருவர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டது. அவர் சமீபத்தில் ஈரான் சென்று வந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply