கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது இன்னொரு வழக்கு!

Share this News:

சென்னை (17 ஜூன் 2021): பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள யூடூபர் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோஹிணி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அம்பேத்கர், பெரியார் முதல், ஸ்டாலின் வரை யூடியூபில் அம் வாய்க்கு வந்தபடி பேசும் கிஷோர் கே சாமிபத்திரிகையாளர்களையும் விட்டு வைக்க மாட்டார்.. பொதுவெளி என்றும் பாராமல், பத்திரிகையாளர்களை மிக கேவலமாக பேசுவார்.

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே புகார் இருந்தபோதும் அவர் மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்பொது திமுக ஆட்சியில் அவர் மீது வழக்கு பாய்ந்தது.தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன்னைப் பற்றியும், மறைந்த கணவர் ரகுவரனை பற்றியும் சோஷியல் மீடியாவில் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக ரோகினி புகார் சொல்லி உள்ளார்.. ஜெயிலில் இருக்கும்போதே 2 கேஸ் பதிவாகிவிட்டதால் மேலும் அவர் சிறையிலேயே இருக்கக்கூடும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply