புதுடில்லி (17 ஜூன் 2021): : இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார்.
90 சதவீத திறன் பெற்ற இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த நோவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோர்பிவேக்ஸ் என்ற தயாரிக்கவுள்ளது. இது வரம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.