சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா “கோடிக்கணக்கான ரசிகர்கள் சி.எஸ்.கே. வெற்றியை கொண்டாடுவது போன்றே முதல்வரும் கொண்டாடி வருகிறார். உண்மையான தலைவன் ஒருவன் இருந்தால், எப்பேற்பட்ட எதிராளியையும் வீழ்த்த முடியும். எவ்வளவு வலிமையாக இருப்பதாக குஜராத் காட்டி கொண்டாலும், அவர்கள் தோற்கடிக்கப்படுவார். பல குஜராத்திகளை நாம் கடந்த காலத்தில் தோற்கடித்துள்ளோம், இனியும் தோற்கடிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து காருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “சென்னை அணியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்து ஜெயிக்க வைத்தது ஒரு பாஜகவின் ஜடேஜாதான், அவரது மனைவி ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். என தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று அண்ணாமலையின் கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.