தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை!

Share this News:

சென்னை (24 மே 2020): தமிழகம் முழுவதும் நாளை, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி நேற்று அறிவித்தார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார். பிறை நேற்று தென்படாததால், திங்கள் கிழமை அன்று, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பெருநாள் தொழுகையை வீட்டிலேயே தொழுதுகொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Share this News: