சென்னை (01 ஏப் 2021): சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.