ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி!

Share this News:

கிருஷ்ணகிரி (21 ஜன 2020): கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடப்பாரை மற்றும் எரிவாயு வெல்டர் மூலம் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே செல்ல கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அப்போது, வங்கியில் இருந்த காலண்டர் மற்றும் ஒயர்கள் தீப்பிடித்ததால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்த அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Share this News:

Leave a Reply