புதுடெல்லி (21 ஜன 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அமல்படுத்தப்படும்.
ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளா்கள் பலனடைய முடியும். பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம் பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும். ஏற்கனவே ஜனவரி 01-ஆம் தேதி முதல் 12 மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.