புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அதனை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும், இணைப்பு நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டிவிட்டர் பக்க பதிவில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் இந்த முடிவு, தேச விரோதமானது. இதனை தடுப்பதற்கு நீதிமன்றம் செல்வேன். எங்கள் குடும்ப சில்வரை விற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்