ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா!

Share this News:

சென்னை (08 பிப் 2020):சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் நூலை வெளியிட இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழா சென்னை ஆர்.எஸ்.டி. அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சேமுமு .முகமதலி தலைமை தாங்கினார். கூட்டத்தை மெளலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி கிராஅத் ஓதினார். இறையன்பன் குத்தூஸ் ஒருமைப்பாட்டுக் கீதம் பாடினார்.

பேராசிரியர் கேப்டன் அமீர் அலி, பேராசிரியர் டாக்டர் சே.சாதிக், அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், மெளலவி டாக்டர் பி.எஸ். சையது மஸ்வூது ஜமாலி, அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தஃபா, பேராசிரியர் டாக்டர் ரூமி முதலியோர் முன்னிலை வகித்தார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் நூல்களை வெளியிட. இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். இலங்கை மூத்த எழுத்தாளர் கலைச் செல்வன், எம். அக்பர்கான் , ஈரோடு தாஜ் முகைதீன், அமீர் ஜவஹர், இப்னு சவூத், காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, கவிஞர் ஜலாலுத்தீன், ரஹ்மத் புத்தகம் பதிப்பாளர் எஸ்.ஏ. முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கீன் மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில், ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாஹூல் ஹமீது, இஸட். பெரோஸ்தீன் மற்றும் பலர் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மெளலவி கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசாக், அபுதாபி ரெஜினால்டு சாம்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மனித உரிமை கூட்டமைப்புத் தேசியத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த ஊடகவியலாளர் திரு.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது ஏற்புரை ஆற்றினார் . மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் ஆர்.எஸ். தர்வேஷ் முகைதீன், ஷேக் சிராஜுதீன், ஃபைஸல், முஹம்மது உசேன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிளை பேராசிரியர் டாக்டர் மு. இ. அகமது மரைக்காயர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

செய்தி தொகுப்பு: திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *