பட்டுக்கோட்டை (03 ஜன 2020): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
03.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமமுக, திராவிடர் கழகம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதி திராவிட முன்னேற்ற சங்கம், வழக்கறிஞர் சங்க பிரமுகர்கள் மாணவர் அமைப்பினர் மற்றும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7000 பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு, சின்னையா தெரு, பழனியப்பன் தெரு, பெரிய தெரு, அறந்தாங்கி சாலை, முத்துப்பேட்ட மற்றும் அதிராம்பட்டினம் மற்றும் சாலைகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.