சென்னை (03 ஜன 2020): எச் ராஜா மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘பொதுக் கூட்டம் ஒன்றில் எச்.ராஜா, மாணவர்கள் மீது நாங்கள் குண்டுகளை வீசுவோம் எனப் பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “நெல்லை கண்ணன், தனிப்பட்ட முறையில் பெயர்களை சொல்லி ஒரு சமூகத்தைத் தூண்டி விட்டார். ஆனால் எச்.ராஜா, அப்படி பேசியதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார்,” என்றார்.